சேவாக் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற வீரேந்தர் சேவாக்கின் சாதனையை ரிஷப் பண்ட் தற்போது முறியடித்துள்ளார். இதற்கு முன் சேவாக் 91, ரோஹித் ஷர்மா 88, ஜடேஜா 80, தோனி 78 சிக்ஸர்கள் அடித்துள்ள நிலையில், ரிஷப் பண்ட் இவர்களின் சாதனையை முறியடித்து 92 சிக்ஸர்கள் அடித்து அசத்தியுள்ளார். இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி