தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடு உயர்வு: மக்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் சாகுபடி பரப்பு சுருக்கம், அதிக உற்பத்தி செலவு மற்றும் அண்டை மாநிலங்களை சார்ந்திருக்கும் நிலை ஆகியவற்றால் அரிசி விலை 25 முதல் 30% வரை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நெல் விளைச்சல் குறைவாக உள்ள நிலையில், தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் கூலி உயர்வு காரணமாக விவசாயிகள் கடனில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு தீர்வாக விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், 125 நாள் வேலைத்திட்டத்தை விவசாயத்துடன் இணைத்தல் மற்றும் மாவட்டந்தோறும் சேமிப்பு கிடங்குகளை அமைப்பது அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕