நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'டேஞ்சர் மாமா' நாளை (நவ. 24) மாலை 5 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. சந்துரு இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி வைரலாகியுள்ளது. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வருகிற நவம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.