டாஸ்மாக் கடைகளில் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் - அரசாணை வெளியீடு

டாஸ்மாக் கடைகளில் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்கள் நிறுவ, அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பெறப்படும் காலி மதுபாட்டில்களுக்கு அவர்களின் மொபைல் எண் இணைப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுமே தவிர, பணமாக வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி மதுபாட்டில்களை திரும்பப்பெற டாஸ்மாக் பணியாளர்களை ஈடுபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களிலும் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

✕
✕