சென்னை தலைமைச் செயலகத்தில் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு

தலைமைச் செயலகத்தில் பார்வையாளர்கள் வருகைக்குத் தமிழ்நாடு அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர் என்றும், 'முதலமைச்சரின் முகவரி' துறைக்கு மனு அளிக்க வருபவர்கள் தனியாக வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டிகளில் மனுக்களைப் போடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக அரசு அமைந்த பின் தினமும் அதிகளவிலான மக்கள் வருவதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த இந்நடவடிக்கை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி