தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில், வக்ஃப் வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராகவும், டாஸ்மாக் முறைகேடு விவகாரத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்படது. மேலும், மாநில அரசுகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும் இருமொழிக்கொள்கையை ஆதரித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டாஸ்மாக் 1000 கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கக் கூடாது எனவும் தீர்மானத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.