வால்பாறையில் நெகிழ்ச்சி: பள்ளத்தில் விழுந்த குட்டி யானையை மீட்ட வனத்துறை

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை பகுதியில், எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்த குட்டி யானையை தமிழக வனத்துறையினர் லாவகமாக மீட்டனர். வனத்துறையினரின் துரிதமான மீட்பு பணியால், உயிருடன் மீட்கப்பட்ட குட்டி யானை மீண்டும் தனது தாயுடன் பத்திரமாக ஒன்றிணைந்தது. இந்த நெகிழ்ச்சியான காட்சியை கண்ட அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் வனத்துறையினரின் அர்ப்பணிப்பை பாராட்டினர்.

நன்றி:iTamilNews

தொடர்புடைய செய்தி