நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கான 30 வகையான கூட்டு மருந்துகளின் விலைக்கு தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) புதிய உச்சவரம்பை விதித்துள்ளது. நீண்டகால நோயாளிகளின் மாதாந்திர மருந்து பட்ஜெட்டை குறைக்கும் நோக்கில் மே 27 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, மருந்து நிறுவனங்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்துவதை தடுக்கும். எனினும், நோயாளிகளின் மருத்துவ செலவை உண்மையிலேயே குறைக்க வேண்டுமானால், இந்த மருந்துகள் மீதான GST% வரியை 5% குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.