காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாகப் பிளாஸ்டிக் அல்லது பாலிமர் ரூபாய் நோட்டுகளை அச்சிட இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆலோசனை நடத்தி வருகிறது. காகித நோட்டுகள் விரைவில் பழையதாகிக் கிழிந்துவிடுவதால், தொடர்ந்து புதிய நோட்டுகளை அச்சிட வேண்டிய நிலை உள்ளது. ஆனால், பிளாஸ்டிக் நோட்டுகள் நீண்ட காலம் உழைக்கும், எளிதில் கிழியாது என்பதால் இந்த புதிய முயற்சியை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி யோசித்து வருவதாகத் தகவல்.