20 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் உள்ள பவாரியா கொள்ளையர்கள் வழக்குகளை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக டிஜிபி வெங்கடராமனுக்கு முன்னாள் டிஜிபி ஜாங்கிட் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், பவாரியா தொடர்பான மீதமுள்ள 20 வழக்குகள் அடையாளம் காணப்பட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால், இந்த வழக்குகளை சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தலைமறைவான அனைத்து குற்றவாளிகளையும், கைது செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.