சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில், வரும் ஜன.26-ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவை முன்னிட்டு முதற்கட்ட அணிவகுப்பு ஒத்திகை இன்று (ஜன.19) அதிகாலை நடைபெற்றது. இதில் இந்திய ராணுவம், கடற்படை, வான்படை மற்றும் ராணுவக் கூட்டு குழல் இசைக்குழு உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து, வரும் ஜன.21,23 ஆகிய தேதிகளிலும், அதிகாலை வேளையில் அடுத்தடுத்த கட்ட ஒத்திகைகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:SunNews