திருச்சி விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜயின் பவுன்சர்கள் செய்தியாளர்களை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. விமான நிலையம் வருகை தந்த விஜயிடம் மைக்கை நீட்டி செய்தியாளர்கள் கேள்வி கேட்க முயன்றனர். அப்போது விஜயுடன் வந்த பவுன்சர்கள், செய்தியாளர்களை தடுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட பவுன்சர்கள் அங்கிருந்து தப்பினர். செய்தியாளர்கள் துரத்தியதால் விஜயின் பவுன்சர்கள் போலீசார் உதவியுடன் காரில் ஏறி புறப்பட்டனர்.
நன்றி: polimer