திருச்சி கிழக்கு தொகுதியைத் தொடர்ந்து மதுராந்தகம், தாராபுரம் மற்றும் பெருந்துறை ஆகிய தொகுதிகளின் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து, இத்தொகுதிகள் காலியானதாக அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து, விரைவில் இந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்துவதற்கான முதற்கட்ட பணிகளைத் தேர்தல் ஆணையம் விரைவுபடுத்தியுள்ளது.