பாம்பன் கடலில் பிரதமர மோடி திறந்துவைத்த புதிய பாம்பன் பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட செங்குத்து தூக்கு ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று (ஏப்.06) திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிலையில், புதிதாக திறக்கப்பட்ட செங்குத்து தூக்கு பாலம் தொழில்நுட்ப கோளாரு காரணமாக கீழே இறக்குவது ஒரு மணி நேரம் தாமதமாகியுள்ளது. பிரதமர் திறந்துவைத்த பாலம் முதல்நாளே பழுதாகியுள்ளது.
நன்றி: தந்தி