ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த நிகழ்வில் பேசிய விஜய், "சில படங்கள் பெயரை கேட்டாலே மலேசியா தான் ஞாபகத்திற்கு வரும். நமது நண்பர் அஜித் நடித்த 'பில்லா' படம் ஞாபகத்திற்கு வருகிறது என கூறினார். இதனை கேட்ட ரசிகர்கள் அரங்கம் அதிர பயங்கரமான சத்தத்தை எழுப்பினர்.