மதத்தின் பெயரால் மற்றவர்களை கொல்வதும், காயப்படுத்துவதும் முற்றிலும் தவறு என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் இது குறித்து பேசிய அவர், "நான் அனைத்து மதங்களின் ரசிகன். இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் குறித்து நிறைய ஆராய்ந்துள்ளேன். மக்கள் வெவ்வேறு மதங்களை பின்பற்றினாலும், அவர்களுடைய நம்பிக்கை தூய்மையானதாக இருக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.