டிட்வா புயல் காரணமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும் என பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "டிட்வா புயல் காரணமாக 85,521.76 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கிய நிலையில், ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும்" என தெரிவித்தார்.
நன்றி: மாலை மலர்