தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டாயம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்பட வேண்டும் என்ற மாநில போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், போரூர் சுங்கச்சாவடி, சூரப்பேடு மற்றும் மாதவரம் ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கிக் கொள்ள ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு பயணிகளுக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
நன்றி: நியூஸ்18