நடிகரும், ரேஸருமான அஜித்குமாரின் ரேஸிங் அணியுடன் ரிலையன்ஸ் குழுமம், மிகப்பெரிய ஒப்பந்தம் செய்துள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் 'கெம்பா' குளிர்பான நிறுவனம், 'அஜித் குமார் ரேஸிங்' அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னர் ஆக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், “இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் அணிகளில் ஒன்றான அஜித் குமார் ரேஸிங்" என ரிலையன்ஸ் குழுமம் இந்த ஒப்பந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.