சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணின் சடலம் மாற்றி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனை முடிந்து, வீட்டில் இறுதிச் சடங்கு செய்யும் போது சடலம் மாறியிருப்பதை உறவினர்கள் கண்டுபிடித்தனர். 18 வயதான பிரியதர்ஷினியின் சடலத்திற்கு பதிலாக 19 வயதான அனுஷ்காவின் சடலம் மாற்றி வழங்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அனுஷ்காவின் சடலத்தை பெற்றுக் கொண்ட ஊழியர்கள், பிரியதர்ஷினியின் சடலத்தை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
நன்றி: பாலிமர்