26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 62 வயது விஸ்வநாத் சிங் என்ற முன்னாவை, டெல்லி காவல்துறை அக்டோபர் 30 அன்று கைது செய்தது. 1998 அக்டோபர் 20 அன்று கோகல்புரி பகுதியில் தனது மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததாக ஜெய் பிரகாஷ் என்பவரை சுத்தியலால் தாக்கி கொன்றதாக விஸ்வநாத் மீது குற்றம் சாட்டப்பட்டது. விபத்து போல் சித்தரிக்கப்பட்ட இந்த வழக்கு விசாரணையில் கொலையாக உறுதிசெய்யப்பட்டது. 2001 முதல் தேடப்பட்டு வந்த சிங், அடையாளத்தை மறைத்து பல்வேறு இடங்களில் வசித்து வந்த நிலையில் தற்போது சிக்கியுள்ளார்.