மருத்துவமனைகள் பதிவு கட்டாயம்: அரசு அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், மருத்துவ நிறுவனங்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. tncea.dmrhs.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யாத மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலி மருத்துவர்கள் குறித்த புகார்களை tncea.dmrhs@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி