சிகரெட் பிடிக்க அனுமதி மறுப்பு: பெட்ரோல் பங்கிற்கு தீ வைத்த நபர்

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் சிகரெட் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த தர்மேந்திரா என்ற நபர் லைட்டரால் பெட்ரோல் குழாய்க்கு தீ வைத்துள்ளார். அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் உடனடியாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து புகார் அளித்ததன்பேரில், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி