கமல்ஹாசனின் 'நாயகன்' திரைப்படம் ரீ-ரிலீஸுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. படத்தின் வெளியீட்டு உரிமை பெற்றுள்ளோம், படத்தை வெளியிடக்கூடாது என தயாரிப்பாளர் எஸ்.ஆர்.ராஜன் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதால் ரீ-ரிலீஸ்க்கு தடை விதிக்க மறுத்து நீதிபதி என்.செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.