இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க (56) வெற்றி பெற்றார். எதிர்க்கட்சித் தலைவர் 2வது இடத்திலும், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே 3வது இடத்துக்கும் தள்ளப்பட்டனர். இந்நிலையில், இன்று (செப்.23) கொழும்பில் உள்ள அதிபர் செயலகத்தில் இலங்கை நாட்டின் 9ஆவது அதிபராக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றுக்கொண்டார். இலங்கை அதிபர் தேர்தலில் 2ஆவது விருப்ப வாக்கு எண்ணிக்கையில் 55.89% வாக்குகளுடன் வெற்றி பெற்றார்