விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் காணாமல்போன சிறுமியை தேடும் பணி 24வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஆடு மேய்க்கும் இளைஞரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல் பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட ராஜதுரை என்பவருடன் தொடர்பில் இருந்த அரவிந்த் என்பவரிடமும் விசாரணை நடக்கிறது. அதே போல் சிறுமியின் உறவினர்களிடம் விசாரிக்கப்பட்ட நிலையில், தாய் பவானியிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.