விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி காணாமல் போன விவகாரத்தில் சிறுமியின் தாய், பாட்டியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 13 நாட்களாக சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் நிலையில் தாயிடம் தொடர்ந்து 5 மணி நேரமாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 11ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிவிட்டு தூங்கிய சிறுமி, அதிகாலையில் காணாமல் போயுள்ளார். இதுவரை எந்த துப்பும் கிடைக்காததால் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.