சென்னைக்கான ரெட் அலர்ட் வாபஸ்.. ஆரஞ்சு எச்சரிக்கை

சென்னையில் இன்று (அக.18) அதி கனமழை பெய்யும் என விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வாபஸ் பெற்றுள்ளது. இதையடுத்து, மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை தொடர வாய்ப்புள்ளது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕