நாளை (ஜூன்.14) மற்றும் நாளை மறுநாள் (ஜூன். 15) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருசில இடங்களில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டத்திற்கு நாளை, நாளை மறுநாள் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.