திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்

திருவள்ளூர் மாவட்டத்துக்கு இன்று (டிச.02) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சிக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஈரோடு, நீலகிரி, கோவையில் நாளை (டிச.03) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி