கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்படும் ஊரக வளர்ச்சி துறை பணிகளை முழுமையாக வீடியோ பதிவு செய்து, அதனை பென்டிரைவில் சமர்ப்பித்த பின்னரே அதற்கான பில்களை செட்டில் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் என்.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். கிராமப்புற பணிகளை எவ்வித தாமதமுமின்றி, அதே நேரத்தில் மிக தரமாகவும் முடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.