ரியல்மி நிறுவனத்தின் P சீரிஸ் ஸ்மார்ட்போன் "ரியல்மி P4 லைட்" இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 6.74 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இத்துடன் புகைப்படங்கள் எடுக்க 13MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. விலையை பொருத்தவரை 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999 என்றும் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.11,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.