இந்திய அளவில் நிலவி வரும் வேலைவாய்ப்பின்மையை பாஜக-விற்கு உணர்த்த தொடங்கப்பட்ட காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) X -சமூக வலைதளப் பக்கம் முடக்கப்பட்டது. இந்த நிலையில், 'COCKROACH IS BACK' என்ற புதிய பக்கத்தைத் தொடங்கியுள்ளார் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் அபிஜீத் திப்கே. முன்னதாக, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், போலிப் பட்டதாரிகளை ‘COCKROACH’ என விமர்சித்திருந்தார். அந்த வார்த்தையை முன்வைத்து, நகைச்சுவயாக இந்த காக்ரோச் ஜனதா கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.