ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை வென்றுள்ளது. இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை அணி X தளத்தில், "நீண்ட காத்திருப்புக்கு ஒரு இனிமையான முடிவு. RCB அணியின் முதல் கோப்பை வெற்றிக்கு வாழ்த்துகள்!" என பதிவிட்டுள்ளது. இந்த வாழ்த்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இதேபோல், மும்பை உள்ளிட்ட அணிகளும் வாழ்த்து தெரிவித்துள்ளன.