ஐ.பி.எல் 2026 தொடரில், இன்று (மே.7) இரவு 7:30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் 50-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையே நடைபெறுகிறது. மழை காரணமாக 19 ஓவர்களாக மாற்றப்பட்டுள்ளது. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 19 ஓவர்களில் 209 ரன்கள் குவித்துள்ளது. தொடர்ந்து, 213 (DLS) ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கை பெங்களூரு அணி விளையாடவுள்ளது.