ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டி இன்று (மே.31) இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பிரம்மாண்ட ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்து வரும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் 10 ரன்களுக்கும், சாய் சுதர்ஷன் 12 ரன்களுக்கும் ஆட்டழிந்தனர்.