RCB வெற்றி கொண்டாட்டம்.. அதிகரிக்கும் உயிரிழப்பு: துணை முதலமைச்சர் மன்னிப்பு

IPL 2025 கோப்பை வென்ற RCB அணியின் வெற்றிக் கொண்டாட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (ஜூன் 4) நடைபெற்றது. இதைக்காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், 'கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பெங்களூரு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்' என்றார்.

நன்றி: PTI

தொடர்புடைய செய்தி