பெங்களூரில் ரசிகர்கள் 11 பேர் உயிரிழந்துவிட்டார்கள் என்ற செய்தி இதயத்தை உலுக்கியது என ஸ்மிருதி மந்தனா வேதனை தெரிவித்துள்ளார். ஆடவர் IPL 2025 போட்டியில் வெற்றிக்கோப்பையை ஆர்சிபி அணி கைப்பற்றியது. இதன் வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதற்கு மகளிர் ஆர்சிபி அணியின் கேப்டன் & இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். அவரின் பதிவில், "பெங்களூரில் நடந்த விஷயம் என்னை கலங்கவைத்துவிட்டது. மன பலத்துடன் இருங்கள்" என கூறியுள்ளார்.