ஐபிஎல் 2025 நடப்பு சாம்பியனான RCB அணியை, அந்நிர்வாகம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அந்த அணியை வாங்க பல்வேறு நிறுவனங்கள் போட்டிபோட்டு வருகின்றன. இந்த விற்பனை மார்ச் 31, 2026-க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அணி விற்கப்பட்டு, பெயர் மாறினால், அதன் கோப்பைகள் மற்றும் சாதனைகள் நீடிக்குமா அல்லது மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குமா என ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.