RCB அணியின் பாராட்டு விழா நேற்று (ஜூன் 4) நடந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இதுகுறித்து ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையில் ஆணையம் நியமிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு அவசர செய்தியாளர் சந்திப்பில், முதல்வர் நீதி விசாரணையை அறிவித்தார். பெங்களூரு நகர காவல் ஆணையர் பி. தயானந்தை இடைநீக்கம் செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.