ரிசர்வ் வங்கி, மார்ச் 31ஆம் தேதி அன்று நாட்டில் வங்கிகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டது என அறிவித்துள்ளது. முன்னதாக அந்த நாளில் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும், நடப்பு நிதியாண்டின் கடைசி தேதி என்பதால் அனைத்து பரிமாற்றங்களும் முழுமையாக வேண்டும் என்பதற்காக தற்போது அந்த முடிவை ஆர்பிஐ மாற்றியுள்ளது. இதனால் அனைத்து வங்கிகளும் மார்ச்.31இல் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.