தங்கத்தின் விலை குறைந்து வரும் நிலையில், வங்கிகளில் நகைக்கடன் பெறுவதற்கான மதிப்பு வரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. அதன்படி, 5 சவரன் வரை நகைக்கடன் பெறுபவர்கள், நகையின் மதிப்பில் 80 சதவீதம் வரை கடன் பெறலாம். இதற்கு முன்பு 75 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சம் எனக் கணக்கிட்டால், ரூ.80 ஆயிரம் வரை கடன் கிடைக்கும். ரூ.5 லட்சத்துக்கு மேல் கடன் பெறுவோருக்கு நகை மதிப்பில் 75 சதவீதம் வழங்கப்படும். இந்த மாற்றம் கடன் பெறுவோருக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.