இந்திய ரிசர்வ் வங்கி தனது கையிருப்பில் உள்ள சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான தங்கத்தை விற்றுவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலை ரிசர்வ் வங்கியும், மத்திய நிதி அமைச்சகமும் திட்டவட்டமாக மறுத்துள்ளன. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் இறக்குமதி செலவினங்களுக்கு மத்தியில் அந்நிய செலாவணிக் கையிருப்பை தக்கவைக்க தங்கம் விற்கப்படுவதாக வதந்திகள் பரவின. இந்த ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி 880.52 டன் தங்கம் இருப்பு உள்ளதாக ஆர்பிஐ வருடாந்திர அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளது.