ராட்டினம் சரிந்து விபத்து: காவலர் உயிரிழப்பு

ஹரியானாவின் சூரஜ்குண்ட் பகுதியில் இன்று (பிப்., 07) பொருட்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த ராட்டினம் திடீரென சரிந்து விழுந்ததில் காவலர் உயிரிழந்தார். இந்த விபத்தில் 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட மூத்த மாவட்ட அதிகாரிகள் விரைந்துள்ளனர். அசம்பாவிதங்களைத் தடுக்க அப்பகுதி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி