ராட்டினம் முறிந்து விழுந்து விபத்து.. 5 பேர் படுகாயம்

கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் சரிந்து விழுந்ததில் தமிழகத்தின் நாகர்கோவிலை சேர்ந்த 2 பெண்கள் 3 குழந்தைகள் என 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். பூங்காவில் மக்கள் ராட்டினத்தில் சுற்றிக் கொண்டிருந்தபோது, அதன் முக்கிய இரும்புக் கம்பிகளில் விரிசல் ஏற்பட்டதே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி