குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்க்க, மத்திய அரசு அனைத்து பயனாளிகளின் கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அக்டோபர் 2023 முதல் நடைபெறும் இப்பணியில், முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.57% eKYC நிறைவடைந்துள்ளது. 100% நிறைவு செய்வதற்காக, நாளை (செப்., 26) தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும். விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.