நெல்லையில் எலி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட தனியார் கல்லூரியில் வங்கி பணிக்கான தேர்வு தற்போது தொடங்கியுள்ளது. சுகாதாரத் துறையின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வங்கி தேர்வில் பங்கேற்றுள்ளனர். மேலடியூர் பகுதியில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் 8 மாணவர்களுக்கு எலிக் காய்ச்சல் இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மறு உத்தரவு வரும் வரை கல்லூரியை மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டது. தற்போது வங்கி பணிக்கான தேர்வு மட்டும் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.