ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச அனிமே விருதுகள் 2026 (Anime Awards) விழாவில் இந்திய நடிகை ரஷ்மிகா மந்தனா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஹாலிவுட் நடிகர் வின்ஸ்டன் டியூக் உடன் இணைந்து, இந்த ஆண்டின் 'சிறந்த அனிமேஷன்' விருதை ரஷ்மிகா மேடையில் வழங்கினார். இந்த உலகளாவிய மேடையில் இந்திய நடிகை ஒருவர் பங்கேற்றது இந்திய சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகப் பார்க்கப்படுகிறது.