டெல்லியில் இன்று (பிப்.16) நடைபெற்ற டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில், அமெரிக்காவிற்கு எதிராக ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார். வெறும் 513 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டிய அவர், ஜாம்பவான் டிவைன் பிராவோவின் சாதனையை முறியடித்துப் முதலிடம் பிடித்துள்ளார்.