4 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த அரிய காகாபோ கிளிக்குஞ்சு

நியூசிலாந்து நாட்டில் அழியும் நிலையில் உள்ள 'காகாபோ' வகை கிளி இனத்தை சேர்ந்த முதல் குஞ்சு, 4 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்துள்ளது. உலகில் பறக்க முடியாத ஒரே கிளி இனமான காகாபோக்கள், சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்டவை என்பதால், இந்த வரவு உலகெங்கிலும் உள்ள இயற்கை ஆர்வலர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது வெறும் 237 கிளிகளே எஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி